வெறும் 90ML படுத்தும் பாடு: படையப்பா ஸ்டைலில் பாம்புடன் டீல் பேசும் போதை ஆசாமி

By Velmurugan s  |  First Published Sep 2, 2024, 2:25 PM IST

இளைஞர் ஒருவர் மதுபோதையில் பாம்பை கையில் பிடித்து அதனுடன் உரையாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.


பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி. இதனை உண்மையாக்கும் வகையில் பாம்பிடம் இருந்து எப்பொழுதும் விலகியே இருக்க வேண்டும் என மனிதர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஒருவர் பாம்புடன் விளையாட ஆரம்பித்தால் என்ன சொல்வீர்கள்? இது போன்ற செயலை ஒரு பைத்தியக்காரர் மட்டுமே செய்ய முடியும். இருப்பினும், இந்த உலகில் துணிச்சலான செயல்களைச் செய்வதில் பின் நிற்காத ஒரு வகை மக்கள் உள்ளனர். 

என்னடா ஆட்டு குட்டிய தூக்கிட்டு போறமாதிரி போறீங்க? முதலையை பைக்கில் தூக்கி சென்ற இளைஞர்கள்

Tap to resize

Latest Videos

undefined

ஆம், குடிபோதையில் இருப்பவர்கள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களிடம் இருந்து தனித்தே தெரிகின்றனர். அவர்களின் செயல்பாடுகளும் தனித்தே இருக்கும். அந்த வகையில் குடிமகன் ஒருவர் பாம்புடன் உரையாடுவது போன்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடைபாதையில் அமர்ந்திருந்த குடிகாரர் ஒரு பாம்பை எடுத்து அதனுடன் பேசுகிறார்.

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலங்கானா; 19 பேர் பலி; பள்ளிகளுக்கு விடுமுறை; 140 ரயில்கள் ரத்து!

மழைக்காலத்தில் பொது இடங்களில் பாம்புகள் அதிகமாகக் காணப்படும். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த சீசன் சற்று கூடுதல் சந்தோஷத்தைத் தரும். @Woke_Nation_எக்ஸ் என்ற சமூக வலைதளப்பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஒரு குடிகாரர் ஒரு பாம்பை கையில் எடுத்து அதனுடன் பேசிக் கொண்டிருப்பதைக் காணலாம். அந்த ஆபத்தான பாம்போ அமைதியாக அவரது செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நபரை அது ஒன்றும் செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த நபர் பாம்பை விட்டுவிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Bus 90ml me bhai ne apni andar ki sakti ko bahar nikal diya🗿 படம்:pic.twitter.com/x2jWRVFao0

— WOKE NATION (@Woke_Nation_)

 

click me!