New Criminal Law : இன்று அமலானது புதிய குற்றவியல் சட்டம்..! சிறப்பம்சம் என்ன.? பாதிப்பு என்ன.?

By Ajmal KhanFirst Published Jul 1, 2024, 9:12 AM IST
Highlights

18 வயது நிரம்பாத சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்தால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

ஆங்கிலேயர் சட்டம் நீக்கம்

ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளது. 150 ஆண்டுகளாக நீதி மற்றும் காவல்துறையில் நடைமுறையில் இருக்கும் IPC, CRPC சட்டங்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு புதிய சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டத்தை மத்திய அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம்' என பெயரிடப்பட்டுள்ள அந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பாராளுமன்றத்தில் கடந்த பாஜக ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றதையடுத்து ஜூலை 1ஆம் தேதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

LPG Gas Cylinders Price : குட் நியூஸ்.. சமையல் எரிவாயு விலை குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?

புதிய சட்டத்தின் சிறப்பம்சம் என்ன.?

ஆங்கிலேயர் உருவாக்கிய சட்டத்தை ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சிஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம் பயன்படுத்தி வரப்பட்டது. இந்த சட்டமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் படி, 

  • ஒரு குற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க, இனி காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவை இல்லை, மின்னனு தகவல் தொடர்பை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்கலாம்.
  • கைது நடவடிக்கையின் போது, கைதுக்கு ஆளாகும் நபர், தான் விரும்பும் ஒரு உறவினர் அல்லது தனக்கு தெரிந்த நபருக்கு அதை பற்றிய தகவலை அளிக்கும் வகையில் புதிய சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 
  • ஒரு வழக்கில் நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்

  • குழந்தையை வாங்குவது மற்றும் விற்பது கொடூரமான குற்றமாகும் என இந்த குற்றவியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பாத சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்தால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்
  • பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை, பெண்ணின் உறவினர் அல்லது பாதுகாவலர் முன்னிலையில், பெண் போலீஸ் அதிகாரி பதிவு செய்ய வேண்டும். மேலும், மருத்துவ அறிக்கைகள்7 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கின் நிலை தொடர்பாகவும், வழக்கின் முன்னேற்றம் தொடர்பாக  90 நாட்களுக்குள் அறிந்து கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.

Train : தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊருக்கு போகனுமா.? இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது- ரிசர்வேஷன் தொடங்கியாச்சு

புதிய சட்டம்- எதிர்ப்பு போராட்டம்

மருத்துவ அலட்சியத்தால் உயிரிழப்புகள் நேரும்போது  அதற்குக் காரணமாக இருந்த மருத்துவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது இதற்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

 விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் வகையில் புதிய  பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது பிரவில் தெரிவிக்கப்பட்டது. இந்த விதிக்கு எதிராக  நாடு முழுவதும் போராட்டம் எழுந்த நிலையில், அந்த பிரிவு மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 
 

click me!