கேரளாவில் ஓடிவரும் மரண வெள்ளத்தைக் கடந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றிய காவல்துறை அலுவலர்..!

Published : Aug 11, 2018, 05:14 PM ISTUpdated : Sep 09, 2018, 08:25 PM IST
கேரளாவில் ஓடிவரும் மரண வெள்ளத்தைக் கடந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றிய காவல்துறை அலுவலர்..!

சுருக்கம்

கேரளாவில் ஓடிவரும் மரண வெள்ளத்தைக் கடந்து ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் பாலத்தை கடந்துள்ள காவல்துறை அலுவலர் ஒருவருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கேரளாவில் கடந்த 50 ஆண்களில் இல்லாத அளவில், கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதுவரை கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 29 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் மாயமானதாக கூறப்படுகிறது. இதுவரை 53 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று உள்ளனர்.

நில சரிவில் சிக்கி, 29 ஆக உயா்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 58 அணிகளில் 22 அணைகள் முழுமையாக நிரம்பி உள்ளத்தால், அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதன் காரணமாக கேரளா முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நிலசரிவில் பல வீடுகள் தரையோடு மட்டமாகி உள்ளன. சாலைகள் இரண்டாக பிளந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. சாலை முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது.

நிலைமையை சமாளிக்க, கேரள மாநில அரசு மத்திய அரசின் உதவியை  நாடி உள்ளது. அதன் பின்மீட்பு குழுவினர் அதிகம் பாதித்த இடங்களுக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மருத்துவ முகாம்களை அமைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பெருக்கெடுத்த வெள்ளம், பாலத்தை மோதி சிதறும் தருவாயில், மின்னல் வேகத்தில் தன் தோளில் சுமந்துக்கொண்டு ஓடி உயிரை காப்பாற்றி உள்ளார் வீரர். 

PREV
click me!

Recommended Stories

தூக்கத்தில் மலம் கழித்த 3 வயது குழந்தை கொலை.. தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்!
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல..! மோகன் பகவத் நெகிழ்ச்சி பேச்சு!