960 தப்லிக் ஜமாஅத் வெளிநாட்டவர் விசா அதிரடியாக ரத்து... தடுப்புப் பட்டியலில் சேர்த்த மத்திய அரசு!

Published : Apr 03, 2020, 09:18 PM IST
960 தப்லிக் ஜமாஅத் வெளிநாட்டவர் விசா அதிரடியாக ரத்து... தடுப்புப் பட்டியலில் சேர்த்த மத்திய அரசு!

சுருக்கம்

இவர்கள் அனைவருடைய விசா ரத்தாகி தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 அமெரிக்கர்கள், 9 இங்கிலாந்து நாட்டவர், 6 சீனர்கள், 379 இந்தோனேசியர்கள், 110 வங்கதேசத்தவர்கள், 63 மியான்மியர்கள், 33 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என 960 பேருடைய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி நிஜாமுதீன் தப்லிக் ஜமாஅத் மா நாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் விசாவை அதிரடியாக ரத்து செய்து தடுப்பு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்ற பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், இது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இந்த மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரம் பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமனோர் வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 
இந்நிலையில், தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினரின் சுற்றுலா விசாவை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இவர்கள் அனைவருடைய விசா ரத்தாகி தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 அமெரிக்கர்கள், 9 இங்கிலாந்து நாட்டவர், 6 சீனர்கள், 379 இந்தோனேசியர்கள், 110 வங்கதேசத்தவர்கள், 63 மியான்மியர்கள், 33 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என 960 பேருடைய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!