
லாரி மீது அதிவேகமாக வந்த ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிரா பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது அதிகவேகமாக வந்த ஜீப் மோதியது. இந்த கோர விபத்தில் 3 பேர் குழந்தைகள் உட்பட 9 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!
இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், அவர்கள் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துதுதுள்ளார்.
இதையும் படிங்க;- குண்டும் குழியுமான சாலையால் பலியானவர்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? அதிர்ச்சி தரும் மத்திய அரசின் ரிப்போர்ட்!!