8-வது ஆண்டாக நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Selvanayagam PFirst Published Sep 26, 2019, 7:37 AM IST
Highlights

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக ஐ.ஐ.எஃப்.எல். பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக திகழ்கிறார்.
முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி என்று ஐஐஎஃப்எல் வெல்த்-ஹரூன் இந்தியா தெரிவிக்கிறது
 

ஐஐஎஃப்எல் வெல்த்-ஹரூன் இந்தியா பட்டியலின்படி 25 இந்தியப் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தியில்(ஜிடிபி) 10 சதவீதம் ஆகும், 953 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு இந்திய ஜிடிபியில் 27 சதவீதமாகும்.

பட்டியலில் 2-ம் இடத்தில் லண்டனைச் சேர்ந்த ஹிந்துஜா&குடும்பத்தினரின் சொத்துமதிப்பு ஒரு லடத்து86 ஆயிரத்து 500 கோடியுடன் உள்ளனர், 3வது இடத்தில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ரூ.ஒரு லட்சத்து 17ஆயிரத்து500 கோடி சொத்துக்களுடன் உள்ளார்

2018-ஆம் ஆண்டில் ரூ. ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்துமதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 831 ஆக இருந்தது இந்த ஆண்டு 953 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டின் படி இந்தியாவின் கோடீஸ்வர்கள் எண்ணிக்கை 141லிருந்து 138 ஆகக் குறைந்துள்ளது.

ஆர்சலர் மிட்டலின் சி.இ.ஓ., எல்.என்.மிட்டலின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து300 கோடியுடன் 4வது இடத்தில் உள்ளார். கவுதம் அதானி ரூ.94 ஆயிரத்து 500 கோடியுடன் 5வது இடத்தில் உள்ளார்.

மேலும் 6-வது இடத்தில் உதய் கோடக் (ரூ.94 ஆயிரம்100 கோடி), 7-வது இடத்தில் சைரஸ் எஸ்.பூனாவாலா (ரூ88 ஆயிரத்து800 கோடி), 8-வது இடத்தில் சைரஸ்  மிஸ்ட்ரி (ரூ76ஆயிரத்து800 கோடி),9-வது இடத்தில் ஷபூர் பலோன்ஜி (ரூ.76 ஆயிரத்து800 கோடி), 10-வது இடத்தில் திலிப் ஷங்வி (ரூ. 71 ஆயிரத்து 500-கோடி).
பட்டியலில் உள்ள 26% அதாவது, 246 நபர்கள் மும்பையில் உள்ளனர், புதுடெல்லியில் 175 செல்வந்தர்களும், பெங்களூருவில் 77 செல்வந்தர்களும் உள்ளனர்.

click me!