வருகிறது புதிய விருது: தேச ஒற்றுமைக்கு உழைத்தவர்களை கவுரப்படுத்தும் மத்திய அரசு

By Selvanayagam PFirst Published Sep 25, 2019, 11:26 PM IST
Highlights

தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உழைத்தவர்களுக்காக சர்தார் வல்லபாய் படேல் பெயரில் குடிமகனுக்கான உயரிய விருதை மத்திய அரசு வழங்க உள்ளது
 

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது

"தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்காக உழைத்தவர்களுக்கு 'சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒருமைப்பாடு விருது' வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  
ரொக்கப்பணம், பணப்பரிசு இல்லாமல் வழங்கப்பட உள்ள இந்த விருதில் பதக்கம், பாராட்டு பத்திரம் மட்டும் இருக்கும். ஆண்டுக்கு 3 பேருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும். உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் வழங்கப்படும் இந்த விருது, அரிதாகவே இறந்தவர்களுக்கு தரப்படும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி சர்தார் படேல் பிறந்தநாளின் போது இந்த விருது அறிவிக்கப்படும்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்படும் நாளில், குடியரசுத் தலைவரால் இந்த விருது வழங்கப்படும்.

இந்த விருதுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், கேபினெட் செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளி்ட்டோர் குழுவில் இடம்பெறுவார்கள்.

இந்த விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு குடிமகனையும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் பரிந்துரைக்கலாம், தனிமனிதர்களும் தங்களை பரிந்துரை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுக்கான பரிந்துரைகள் ஏற்கப்படும். அனைத்து குடிமக்களும் மதம், சாதி, இனம், பாலினம், பிறப்பிடம், வயது, தொழில் என பாகுபாடு இல்லாமல் இந்த விருதுக்குத் தகுதயானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!