87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் - இலங்கையை சேர்ந்த இருவர் கைது

 
Published : Apr 16, 2017, 09:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் - இலங்கையை சேர்ந்த இருவர் கைது

சுருக்கம்

87 lakh gold seized in mumbai airport and two srilankans arrested by police

மும்பை விமானநிலையத்தில் தங்கம் கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

மும்பை விமான நிலையத்தில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் விமான பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த இருவரிடம் சோதனை மேற்கொண்டபோது அவர்கள் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும் தங்கம் கடத்தி வந்தது உண்மைதான் எனவும் ஒப்புக்கொண்டனர்.

பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே விமானத்தை கடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து மும்பை விமான நிலையத்தில் போலீஸ் பாதுக்காப்பு பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
'பாகுபலி' ராக்கெட் ரெடி.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு வழிபாடு!