சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி… தமிழகத்திற்கு ரூ.805 கோடி ஒதுக்கியது மத்திய அரசு!! | Tamilnadu

By Narendran SFirst Published Nov 13, 2021, 2:44 PM IST
Highlights

#Tamilnadu தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக 805.92 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு  ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக 805.92 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு  ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய - மாநில அரசுகளுக்கிடையே 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியை பங்கிட்டுக் கொள்ள என்.கே.சிங் தலைமையில் பதினைந்தாவது நிதிக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மத்திய அரசிடம் சமா்ப்பித்தது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இந்த அறிக்கையில், மத்திய மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிா்வுகள் தொடா்பாக பல்வேறு பரிந்துரைகள்அளிக்கப்பட்டுள்ளன. வருகின்ற 2021 முதல் 2026 -ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நாட்டின் மொத்த வருவாய் ரூ.135.20 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டிருந்தது. இதில் செஸ், கூடுதல் வரி, வரி வசூலுக்கான செலவு போன்றவை மத்திய அரசுக்கு வழங்கப்படும். இவை தவிா்த்து மீதமுள்ள ரூ. 103 லட்சம் கோடி மத்திய- மாநில அரசுகளிடையே பகிா்ந்து கொள்ளப்படும். இதில் 42 சதவீதம் மாநிலங்களுக்கும் மீதி மத்திய அரசு பங்கிட்டுக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதில் மாநிலங்களின் வருவாய்ப் பற்றாக்குறை, உள்ளாட்சி அமைப்புகள், பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட 13 வகையான செலவினங்களுக்கு ரூ.10.33 லட்சம் கோடியை மானியமாக அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக மின்துறை, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் மாநில அரசுகள் நேரடிப் பணப் பரிவா்த்தனை அடிப்படையிலேயே மானியங்களை வழங்க வேண்டும் எனவும் நிதி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கிடையே பதினைந்தாவது நிதிக் குழு 2021-22 முதல் 2025-26 வரையிலான தனது அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொத்தம் ரூ.4,27,911 கோடி மானியம் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. ஆணையம் பரிந்துரைத்த மானியங்களில் ரூ.70,051 கோடி சுகாதார மானியங்களும் அடங்கும். இந்த தொகையில் ரூ.43,928 கோடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.26,123 கோடி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,19 மாநிலங்களின் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதாரத் துறை மானியமாக ரூ.8,453.92 கோடியை நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மானியங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார திட்டங்களுக்காக ரூ.805.92 கோடி கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ.805.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி நகர்புறம், கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 19 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.19 மாநிலங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதாரத்துறை மானியமாக ரூ.8,453.92 கோடி நிதி அமைச்சகத்தின் செலவின துறை வெளியிட்டுள்ளது. 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மானியங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் திட்டங்களுக்காக ரூ.805.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!