மலேசியாவிற்கு தப்ப முயன்ற தப்லீக் ஜமாத் பங்கேற்பாளர்கள்..! விமானநிலையத்தில் சுற்றிவளைத்த போலீஸ்..!

By Manikandan S R SFirst Published Apr 6, 2020, 8:09 AM IST
Highlights

ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் முடங்கியிருந்த மலேசியர்களை மீட்க அந்நாட்டு தூதரகம் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்தது. அதில் டெல்லி-என்சிஆா் பகுதியில் தலைமறைவாக இருந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற மலேசியா்கள் 8 போ் தங்கள் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது குடியுரிமை அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

டெல்லியில் இருக்கும் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தப்லீக்  ஜமாத் என்கிற இஸ்லாமிய அமைப்பு இஸ்லாமிய மதகுருக்கள் பங்கேற்ற மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தப்லீக் ஜமாத் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. இதனால் அம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அரசு  கூறியுள்ளது. அவர்களில் பலரை கண்டுபிடித்து மருத்துவ பரிசோதனை செய்து தனிமை சிகிச்சையில் அரசு வைத்திருக்கிறது. பலர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர்களை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக தேடி வருகின்றன.

இதனிடையே மாநாட்டில் பங்கேற்ற மலேசியாவைச் சோ்ந்த 8 போ் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டனா். ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் முடங்கியிருந்த மலேசியர்களை மீட்க அந்நாட்டு தூதரகம் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்தது. அதில் டெல்லி-என்சிஆா் பகுதியில் தலைமறைவாக இருந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற மலேசியா்கள் 8 போ் தங்கள் நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது குடியுரிமை அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

சுற்றுலா விசாவில் இந்தியா வந்து தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச காவல்துறையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 8 போரையும் கைது செய்த டெல்லி போலீஸ் தனிமையில் வைத்துள்ளனர்.

click me!