பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் ஒற்றுமையுடன் நம்பிக்கை ஒளியேற்றிய நாட்டு மக்கள்

By karthikeyan VFirst Published Apr 5, 2020, 9:31 PM IST
Highlights

கொரோனாவால் ஏற்பட்ட இருள் விலக, நாட்டு மக்கள் மின்விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்கை ஏற்றுமாறும் அல்லது டார்ச் - செல்போன் விளக்கை ஒளிரச்செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் ஒற்றுமை ஒளியை ஏற்றினர்.
 

கொரோனாவால் உலகமே பேரழிவை சந்தித்துவருகிறது. இந்தியாவில் 3500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன.

கொரோனாவிற்கு மருந்து இல்லாததால் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, வரும் 14ம் தேதி வரை நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் போர் தொடுத்துவரும் இந்த வேளையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இருளை நீக்கும் வகையில், இன்று(ஏப்ரல் 5) இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டின் மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீடுகளில் அகல்விளக்கை ஏற்றுமாறும், டார்ச் லைட் அல்லது செல்போன் விளக்கை வீட்டிற்கு வெளியே வந்து ஆன் செய்யுமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்குகளையும் டார்ச் லைட்டிலும் ஒற்றுமையுடன் நம்பிக்கை ஒளியேற்றினர். கொரோனா இருளுக்கு எதிராக நாட்டு மக்கள் நம்பிக்கை ஒளியேற்றினர்.
 

click me!