கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு..!

Published : Aug 06, 2020, 12:02 PM IST
கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு..!

சுருக்கம்

குஜராத்தில்  கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

குஜராத்தில்  கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. 

இதனையடுத்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனையடுத்து, குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களில் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம்  நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கெத்து..! மும்தாஜ் தாஹா, ஸ்ரீலேகா.. சிங்கப் பெண்களை வைத்து மாஸ் வெற்றி!