ராகுல் காந்திக்கு தனது சொத்துக்களை எழுதி கொடுத்த மூதாட்டி.. ஏன் தெரியுமா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 05, 2022, 04:30 PM IST
ராகுல் காந்திக்கு தனது சொத்துக்களை எழுதி கொடுத்த மூதாட்டி.. ஏன் தெரியுமா?

சுருக்கம்

இதனால் தான் எனது சொத்துக்கள் அனைத்தையும் ராகுல் காந்திக்கு எழுதி கொடுக்கிறேன் என புஷ்பா முன்ஜியல் தெரிவித்து இருக்கிறார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியை சேர்ந்த மூதாட்டி புஷ்பா முன்ஜியல். இவர் தனக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதி கொடுத்துள்ளார். இவருக்கு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் சுமார் 100 கிராம் தங்கம் உள்ளது. 

ராகுல் காந்தியின் சிந்தனை நம் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. இவரின் கருத்துக்களால் நான் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். இதனால் தான் எனது சொத்துக்கள் அனைத்தையும் ராகுல் காந்திக்கு எழுதி கொடுக்கிறேன் என புஷ்பா முன்ஜியல் தெரிவித்து இருக்கிறார். 

எழுதி கொடுக்கிறேன்:

சொத்துக்களை எழுதி கொடுக்க முடிவு செய்ததை அடுத்து டேராடூன் நீதிமன்றத்திற்கு சென்ற புஷ்பா முன்ஜியல் நீதிமன்றத்தில் உயில் ஒன்றை பதிவு செய்தார். அதில் தனது எல்லா சொத்துக்களும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி எம்.பி.க்கு எழுதி கொடுக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார். 

புஷ்பா முன்ஜியல் தனது அனைத்து சொத்துக்கலின் உரிமையை ராகுல் காந்திக்கு மாற்றிக் கொடுக்க அனுமதிக்கும் உயிலை உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங் வீட்டில் வைத்து கொடுத்தார். ராகுல் காந்தி சார்பில் இந்த உயிலை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பிரீத்தம் சிங் பெற்றுக் கொண்டார்.

சொத்து உரிமை:

இந்தியாவில் சொத்துக்கள் எப்போதும் ஒருவரின் வாரிசு, மிகவும் பிடித்த நபர்கள் என குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே எழுதி கொடுப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் சிலர் தங்களின் சொத்துக்களை ஆசிரமம், கோயில், தங்களை பராமரிப்பவர்களுக்கும் எழுதி கொடுப்பர். 

இந்த நிலையில், மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு எழுதி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சொத்து மதிப்பு:

உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த 78 வயதான புஷ்பா முன்ஜியால் தனக்கு சொந்தமான - ரூ. 50 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள், சுமார் 100 கிராம் தங்க நககளை காங்கிரஸ் டசியன் எம்.பி. ராகுல் காந்திக்கு எழுதி கொடுத்துள்ளர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!