77-வது சுதந்திரன தினம்: டெல்லி செங்கோட்டையில் 10-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

By Ramya s  |  First Published Aug 15, 2023, 7:38 AM IST

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கோடியை ஏற்றினார்.


இன்று நாடு முழுவதும் 77-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி 10-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 10,000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் 1,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டெல்லி செங்கோட்டையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின உரை நிகழ்த்த செங்கோட்டை செல்லும் முன் பிரதமர் மோடி காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன்பின் செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு முப்படைகள் வரவேற்பு அளித்தது. முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி பின்னர் சிவப்பு கம்பளத்தில் பீடுநடை போட்டு நடந்தார். நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கோடியை ஏற்றினார். 2014-ம் ஆண்டு தொடங்கி, பிரதமர் மோடி 10-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடியேற்றிய பிறகு ராணுவ இசைக்குழுவினர் தேசிய கீதம் இசைத்து மரியாதை செலுத்தினர். விமானப்படையின் மார்க்-3 துருவ் என்ற அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் மூலம் கொடிக்கு மலர் தூவப்பட்டது.

Tap to resize

Latest Videos

செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் 1800 சிறப்பு விருந்தினர்கள் கொண்டனர். அதன் ஒரு பகுதியாக  நாடு முழுவதிலுமிருந்து ஐம்பது செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.  660க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராமசபை தலைவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் உறுப்பினர்கள், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானத் தொழிலாளர்கள், காதி தொழிலாளர்கள், பல்வேறு பங்களிப்பாளர்கள், வளர்ச்சி திட்டங்கள், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

 

சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் 3ஆவது முறையாக கொடியேற்றும் முதல்வர் ஸ்டாலின்!

click me!