இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா.. தேசத்தையே அச்சுறுத்தும் மகாராஷ்டிரா

By karthikeyan VFirst Published Apr 23, 2020, 10:04 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 6427ஆக அதிகரித்துள்ளது.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினமும் சராசரியாக 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், போகிற போக்கை பார்த்தால் அதற்குள்ளாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்பதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 

இந்தியாவில் 21700க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா தான் பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறது. கடந்த மாத(மார்ச்) இறுதியில் மகாராஷ்டிராவும் கேரளாவும் கிட்டத்தட்ட சமமான பாதிப்பு எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே கடந்த 20 நாட்களாக கேரளாவில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிற்கு, கேரளாவிற்கு அடுத்தபடியாக பாதிப்பில் தினம் தினம் உச்சம் தொட்ட, தமிழகத்திலும் கடந்த 10 நாட்களாக பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. 

தமிழ்நாட்டில் 1653 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கையும் கட்டுக்குள் வந்துள்ளது. கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கிறது. 

ஆனால் மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் குறைவதாயில்லை. போகப்போக மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 778 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 6427ஆக அதிகரித்துள்ளது. இந்த 778 பேரில் 522 பேர் மும்பை. மகாராஷ்டிராவில் இதுவரை 840 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் படுமோசமாக உயர்ந்து கொண்டிருப்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இன்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் இறப்பு எண்ணிக்கை 269லிருந்து 283ஆக அதிகரித்துள்ளது. 

டெல்லியி மற்றும் குஜராத்திலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதேவேகத்தில் அதிகரித்து கொண்டிருக்கிறது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2376ஆக அதிகரித்துள்ளது.  
 

click me!