24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் உச்சபட்ச கொரோனா பாதிப்பு.. ஆயிரக்கணக்கில் எகிறும் அபாயம்

Published : May 23, 2020, 03:54 PM ISTUpdated : May 23, 2020, 03:58 PM IST
24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் உச்சபட்ச கொரோனா பாதிப்பு.. ஆயிரக்கணக்கில் எகிறும் அபாயம்

சுருக்கம்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6,654 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது.   

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன. அதனால் தினமும் தேசியளவில் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. 

நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 149ஆக அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 44,582 பேரும் அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் 14,753 பேரும் குஜராத்தில் 13,268 பேரும் டெல்லியில் 12,319 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 6,494 பேரும், மத்திய பிரதேசத்தில் 6,170 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,735 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்கம், தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், பீஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு பெரியளவில் இல்லை. இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் பெரும் அச்சுறுத்தலாக திகழ்கிறது.

வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 6088 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 2 நாட்கள், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6000க்கும் அதிகமாக உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

PF Interest: உங்க PF கணக்குல வட்டி பணம் வந்தாச்சா? 2 நிமிஷத்துல பேலன்ஸ் செக் பண்றது எப்படி?
Train Ticket Concession: ரயிலில் 25% முதல் 75% வரை கட்டண சலுகை..! யாருக்கெல்லாம் தெரியுமா..?