
ஓளரங்கசீப் எனும் இந்திர ராணுவ வீரர் ரமலானின் போது, தன்னுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இந்த ராணுவ வீரரை, காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்தனர். கடுமையான தேடலுக்கு பிறகு அவரது உடல் ஜூன் 14 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
அவரை கடத்தி இருந்த தீவிரவாதிகள் அவரை கடுமையாக தாக்கி, சுட்டு கொன்றிருந்தனர். இந்த சம்பவம் அவரது உறவினர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை ,அவரது உறவினர்கள் மத்திய மற்றும் மாநில அரசிடம் வைத்தனர்.
ஒளரங்கசீப்பிற்கு மிகப்பெரிய நட்பு வட்டம் இருந்தது. அவரது இந்த கொடூர மரணம் அவரது நண்பர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், துயரத்தையும் அளித்திருக்கிறது. இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் 50 பேர் சவுதியில் தாங்கள் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு , இந்தியா வந்திருக்கின்றனர்.
இந்திய ராணுவத்தில் சேர்ந்து தங்கள் நண்பனின் மரணத்திற்கு காரணமான, தீவிரவாதிகளை பழிவாங்குவதே இவர்களின் லட்சியம் என , ஒளரங்கசீப்பின் நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். நண்பனுக்காக அவர்கள் செய்திருக்கும் இச்செயலை மக்கள் மனமாற பாராட்டி வருகின்றனர்.