
இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்களால் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மே 15 மற்றும் 16-ம் தேதிகளில் ராஜோரி மாவட்ட எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெர்விக்கப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ராஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளிலுள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், மத்திய பொறியியல் படைப் பணியாளர் மரணமடைந்தார். மேலும், இரு வீரர்கள் காயமடைந்தனர்.
தொடர்ந்து இரு தரப்புக்கும்இடையே சண்டை வலுப்பெற்று வந்தது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர்.
மேலும் பிம்பர், பட்டாலில் 6 பாகிஸ்தான் வீர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.