கருப்பு பணத்தை பிடிக்கும் மோடியின் முயற்சி பிசுபிசுத்தது - தோல்வியை ஒப்புக் கொண்டது மத்திய அரசு

First Published Jun 1, 2017, 4:29 PM IST
Highlights
modi demonetisation is a failure says central govt


நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வௌிக் கொண்டு வர மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிரதமர் கரீப் கல்யாண் திட்டம்’(பி.எம்.ஜி.கே.ஒய்) சிறப்பாகச் செயல்படவில்லை என மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதில் கடந்த 6 மாதத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.

கருப்பு பணம்

கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் அரசிடம் உரிய வரி, 50 சதவீதம் அபராதம் ஆகியவற்றைச் செலுத்தி வழக்கு, விசாரணையின்றி தப்பித்துக்கொள்ளும் திட்டத்தை மத்திய வருவாய்த்துறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இதற்கு ‘பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா’ என பெயரிடப்பட்டது.

வரி வசூல்

ஏறக்குறைய 7 மாதங்கள் மத்திய வருமான வரித்துறையால் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வரி வசூலை தரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 7 மாதத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது

ஐ.டி.எஸ். திட்டம்

அதேசமயம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வருமானத்தை தானாக வௌியிடும்(ஐ.டி.எஸ்.) திட்டத்தைமத்தியஅரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு ரூ.67 ஆயிரத்து 382கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி இல்லை

இது குறித்து  மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ கருப்பு பணத்தை வௌிக் கொண்டு வர மத்திய அரசு கொண்டு வந்த பிரதமர் கரீப் கல்யாண் திட்டம் எதிர்பார்த்த வெற்றியையும் தரவில்லை. வரவேற்பும் இல்லை. இந்த திட்டம் மூலம் ரூ. 5 ஆயிரம் கோடியே வசூலிக்கப்பட்டுள்ளது.

தோல்விக்கு காரணம்

இந்த திட்டம் தோல்வி அடைய 2 முக்கியக்காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இந்த திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே மக்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளில் தங்களின் பணத்தை டெபாசிட் செய்து விட்டனர். 2-வது இந்த திட்டத்தில் வரியும், அபராதமும் அதிகம்’’ எனத் தெரிவித்தார்.

தனித்தனியாக பார்க்க கூடாது

இது குறித்து  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், “ கருப்பு பணத்தை ெவளிக் கொண்டு வருவதற்காக கொண்டு வரப்பட்ட பிரதமர் கரீப் கல்யான் திட்டத்தை தனித்துப் பார்க்கக்கூடாது. இதற்கு முன் ஐ.டி.எஸ். எனும் வருமானத்தை தானாக வௌிக்காட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு மக்கள் அதிக ஆர்வம்காட்டினார்கள்.

அந்த திட்டமும், இதுவும் ஒரேமாதிரியான திட்டங்கள்தான். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கவேண்டும். கருப்பு பணம், பினாமி சொத்துக்களுக்கு எதிராக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்’’ எனத் தெரிவித்தார்.

click me!