
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றி புதிய பணத்தை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பணத்தை வங்கிகளிலிருந்து எடுக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி 4,500 வரை மட்டுமே பெற்று கொள்ள முடியும்.
இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கும், திருமணம் போன்ற நிகழ்சிகளுக்கும் போதிய பணம் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகினறனர்.
இந்நிலையில், திருமண செலவிற்கு வங்கியில் இருந்து பணம் எடுக்க வேண்டிய நிலை இருந்தால் அருகிலுள்ள எஸ்.பி.,அலுவலகத்தில் கடிதம் எழுதி கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது திருமணத்திற்காக 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.