பலி கணக்கை எண்ணத் தொடங்கிய கோடை வெப்பம் - மஹாராஷ்டிராவில் 5 பேர் பலி 

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
பலி கணக்கை எண்ணத் தொடங்கிய கோடை வெப்பம் - மஹாராஷ்டிராவில் 5 பேர் பலி 

சுருக்கம்

5 Dead In Maharashtra As Heat Wave Sweeps Through Parts Of India

மஹாராஷ்டிராவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது இயல்பைக் காட்டிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, உள்ளிட்ட 9 பெருநகரங்களில் வெப்பநிலை அதிகரித்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 

வெப்பத்திற்கு மனிதர்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில் மஹாராஷ்டிராவில் நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் கடலோரப் பகுதி மற்றும் ஒரிசாவில் கடந்தாண்டு மட்டும் 1500க்கும் அதிகமானோர் வெப்பத்திற்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

Diwali Train: தீபாவளி ரயில் டிக்கெட் இன்று ஓபன்..! சீட் பறிபோகும் முன் இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க!
Neem Karoli Baba: சந்நியாசி ஆன நீம் கரோலி பாபா... அப்போ மனைவி, பிள்ளைகள் என்ன ஆனார்கள்? தெரியாத குடும்பக் கதை