இந்தியாவில் 4ஜி-ன் வேகம் மிகக் குறைவு! எந்தெந்த நாடுகளைவிட தெரியுமா?

First Published Feb 26, 2018, 11:16 AM IST
Highlights
4G Speed very low in India


இந்தியாவில் 4ஜி-ன் வேகம் மிக அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், அது நிஜமல்ல என்பதை ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பாகிஸ்தான், கஜகஸ்தான், துனீசியா, அல்ஜீரியா, இலங்கை ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கி உள்ளது என்பதே உண்மை.

ஓபன் சிக்னல் என்ற நிறுவனம், ஆறு கண்டங்களில் உள்ள 88 நாடுகளின் 4ஜி சேவையை ஆய்வுக்குட்படுத்தயிது. இதில் சிங்கப்பூர் 44.31 எம்பிபிஎஸ் வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது.  இதற்கு அடுத்தபடியாக 42.12 எம்பிபிஎஸ் வேகத்துடன் நெதர்லாந்து உள்ளது. நார்வே, 41,20 எம்பிபிஎஸ் வேகத்துடனும், தென் கொரியா 40.20 எம்பிபிஎஸ் வேகத்துடனும், ஹெங்கேரியில் 39.18 எம்பிபிஎஸ் வேகத்துடன் 4ஜி சேவை கிடைத்து வருகிறது. 

அமெரிக்காவில் 16.31 எம்பிபிஎஸ் வேகத்தில் மட்டுமே 4ஜி சேவை கிடைக்கிறது. பாகிஸ்தானில் 13.56 எம்பிபிஎஸ் வேகமும், இலங்கையில் 13.95 எம்பிபிஎஸ் வேகமும் உள்ளது. ஆனால் இந்தியாவில் 4ஜி சேவை சராசரியாக வெறும் 6.07 எம்பிபிஎஸ் வேகத்தில் மட்டுமே 4ஜி சேவை கிடைக்கிறது. இலங்கை, கஜகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளிலும், இந்தியாவை விட 4ஜி வேகம் அதிகமாக கிடைக்கிறது. 4ஜி இணைப்புகளை அதிகம் வழங்கிய 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 86.26 சதவிகித பங்களிப்புடன் 14-வது இடத்தில் உள்ளது.

click me!