எதுக்கெடுத்தாலும் டெபிட் கார்டு ஸ்வைப் பண்றீங்களா? - உஷார்..!!! 40 ரூபாய்க்கு 4 லட்சம் காலி...

First Published Mar 14, 2017, 3:35 PM IST
Highlights
4 lakhs taken instead of 40 lakhs


கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த  மருத்துவர்  ராவ்  என்பவரின்,  டெபிட் கார்டிலிருந்து ரூ.40 கு பதிலாக, 4 லட்சம் ரூபாயை டோல்கேட்டில் ஸ்வைப் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்சசியை கிளப்பியுள்ளது.

மைசூரில் வசிக்கும் மருத்துவர் ராவ், கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு காரில்  சென்றுள்ளார் . அப்போது, அந்த நெடுஞ்சாலையில் உள்ள குண்ட்மி டோல்கேட்டை  கடக்கும் போது கட்டணமாக ரூ.40 கேட்கப்பட்டுள்ளது. அப்போது தன்னிடம் இருந்த டெபிட் கார்டை பயன்படுத்தி உள்ளார் .

அதில் ரூ.40 கு பதிலாக, 4 லட்சம் ரூபாய் என பதிவு செய்து ஸ்வைப் செய்துள்ளார் அந்த ஊழியர்.பின்னர் அவருடைய வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் குறைந்துள்ளதாக  மருத்துவர்  ராவுக்கு மேசேஜ் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  மருத்துவர் அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . இருந்த  போதிலும் அந்த ஊழியர் அவருடைய  தவற்றை ஒப்புக்கொள்ளவில்லை .

ஒரு கட்டத்தில், செய்வதறியாது பணத்தை  பறிகொடுத்து நின்ற மருத்துவர் ராவ் ,டோல்கேட்டிலிருந்து  சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவல்  நிலையத்தில்  நள்ளிரவு  1  மணிக்கு  புகார்  தெரிவித்துள்ளார் .

பின்னர் டோல்கேட்திற்கு விரைந்த தலைமை காவலர்  மேற்கொண்ட  விசாரணையில் தன் தவறை  ஒப்புக்கொண்டார் ஊழியர். பின்னர் தவறுதலாக ஸ்வைப் செய்த பணத்திற்கு “செக்” கொடுக்க  முற்பட்டுள்ளார்  டோல் கேட் அதிகாரி . ஆனால் செக் வாங்க  மறுத்த  மருத்துவர்  ராவ் , விடியும்  வரை காத்திருந்து தலைமை காவலரின் உதவியோடு ஒரு வழியாக 3,99,960 ரூபாயை  ரொக்கமாக பெற்று தன் பயணத்தை  தொடர்ந்துள்ளார். ரொக்கமாக பணத்தை பெரும் போது, விடியற்காலை 4 மணி என்பது  குறிப்பிடத்தக்கது

எப்படியோ பணத்தை பெற்றுவிட்டோம் என பெருமூச்சிவிட்ட மருத்துவர் ராவ், தன்னுடைய  பயணத்தை  தொடர்ந்தார் . இதிலிருந்து  என்ன  தெரிகிறது  எதற்கெடுத்தாலும் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட்  பயன்படுத்தும் பழக்கம்  கொண்டவர்கள் மிகுந்த கவனதுடன் இருந்தால் நல்லது .

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே டெபிட் கார்ட் பயன்படுத்தும் போது, நம்  வங்கி கணக்கிலிருந்து  எவ்வளவு  ரூபாய்  குறைந்துள்ளது என்பதை சரி பார்த்துக் கொள்வது நல்லது . 

click me!