மேற்கு வங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உடல் சிதறி பலி; பலர் படுகாயம்

By SG Balan  |  First Published Aug 27, 2023, 2:25 PM IST

விபத்து நிகழ்ந்த தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் காவல்துறையும், உள்ளூர் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்றும் மக்கள் குற்றம் சாட்டினர்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள துத்தாபுகூரில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

காலை 10.00 மணியளவில் இந்த வெடி விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. பட்டாசு ஆலைக்குப் அருகிலுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது தான் லட்சியமா? 10ஆம் வகுப்பில் இருந்தே திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்!

விபத்து நிகழ்ந்த தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் காவல்துறையும், உள்ளூர் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்றும் மக்கள் குற்றம் சாட்டினர்.

அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அரசு தரப்பில் இன்னும்  இறப்பு எண்ணிக்கை அதிக்காரபூர்வமாக வெளியிடவில்லை.

click me!