
அந்தமான் நிகோபர் பகுதியில் இன்று அதிகாலை 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் - நிக்கோபர் தீவில் கேம்ப்பெல் பே என்ற பகுதியின் வடக்கில், நேற்று பகல் 1:15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி இருந்தது. தொடர்ந்து மதியம் 2.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது இதுவும், 4.1 ரிக்டர் அளவில் இருந்தது. இதையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்கள் வீடுகளில் இருந்தனர்.
சிறந்து விளங்கும் தமிழக புலிகள் காப்பகங்கள்: பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் பாராட்டு
இத்துடன் நின்று விடாமல் தொடர்ந்து மூன்றாவது முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. மேலும் நேற்று மாலையும் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறைவாக இருந்தது. ஆனால், தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அதிகரித்து காணப்பட்டன. இதனால் மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் தெருக்களில் கூடினர்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.26 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கேம்பெல் பே அருகே 220 கி.மீட்டார் தொலைவில் நிலத்திற்கு அடியில் பத்து மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இது 4.6 ஆக பதிவாகி இருந்தது.
ரஷ்யாவில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள கம்சட்கா பகுதியிலும் திங்களன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, வேறு பெரிய பாதிப்போ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. சுனாமி ஏற்படும் அபாயமும் இல்லை என்று ரஷ்யா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் 67 ஆயிரம் போக்சோ வழக்குகள்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் உ.பி. முதலிடம்