டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை... 9 ஆக அதிகரித்தது பாதிப்பு எண்ணிக்கை!!

By Narendran SFirst Published Aug 3, 2022, 11:18 PM IST
Highlights

டெல்லியில் 31 வயதான நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆகவும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆகவும் அதிகரித்துள்ளது. 

டெல்லியில் 31 வயதான நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆகவும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அன்று, 35 வயதான ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த, வெளிநாட்டுப் பயணத்தின் சமீபத்திய வரலாறு இல்லாத ஒரு நபரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: குரங்கு அம்மையை தடுக்க தடுப்பூசியா? மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திய சீரம் சிஇஓ!!

சோதனையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட அந்த நபர் டெல்லி அரசு நடத்தும் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த திங்கள்கிழமை இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைப்பு: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

டெல்லி அரசுக்கு கீழ் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான எல்என்ஜேபி மருத்துவமனை, நகரில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் குரங்கு அம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. உலகளாவிய ரீதியில், பல ஆயிரக்கணக்கான நாடுகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் குரங்கு அம்மை பாதிப்புக்கு பல இறப்புகளும் பதிவாகியுள்ளன. 

click me!