குரங்கு அம்மையை தடுக்க தடுப்பூசியா? மத்திய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திய சீரம் சிஇஓ!!

By Narendran SFirst Published Aug 3, 2022, 10:40 PM IST
Highlights

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசியை கண்டறிவது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாக சீரம் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். 

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசியை கண்டறிவது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாக சீரம் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில் அதற்கு தடுப்பூசி கண்டறியப்பட்ட பின் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு, மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரங்கம்மை என்ற புதியவகை வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் டெல்லி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 9 பேர் குரங்கம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பாஜவில் இருந்து வந்தவருக்கு அமைச்சர் பதவி.. மம்தா பானர்ஜி போட்ட புது ஸ்கெட்ச் !!

இதனிடையே குரங்கு அம்மைக்கு தடுப்பூசி தயாரிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அமைச்சரை சந்தித்த சீரம் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், குரங்கு அம்மை நோய் தொற்றின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைப்பு: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சமீபத்தில் சந்தித்த பிறகு இந்த கருத்துக்கள் வெளிவந்தன. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ ஆதார் பூனாவாலா, மத்திய அமைச்சர் உடனான எனது சந்திப்பு எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. தடுப்பூசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமைச்சரிடம் தெரிவித்தேன். குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசியை கண்டறிவது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

click me!