300 யூனிட்டு மின்சாரம் இலவசம்... பஞ்சாப் முதல்வரின் அறிவிப்பால் வாயடைத்துப்போன மக்கள்!!

By Narendran SFirst Published Jul 1, 2022, 11:23 PM IST
Highlights

300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை பஞ்சாப் முதல்வர் பகவத்ந்மான் நிறைவேற்றியுள்ளார். 

300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை பஞ்சாப் முதல்வர் பகவத்ந்மான் நிறைவேற்றியுள்ளார். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பல இடங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. இதை அடுத்து அங்கு பகவந்த் மான் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்ட ஆம் ஆத்மி அமைச்சரவை, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  

இதையும் படிங்க: எம்பிக்களின் ரயில் பயண செலவு இத்தனை கோடியா? மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

அந்த வகையில் தற்போது தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றிற்கு 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்ததை நிறைவேற்றியுள்ளது. மேலும் இதனை பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநில முதல்வர் பகவத்ந்மான் உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், முந்தைய அரசுகள் தேர்தல்களின் போது அளிக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றும் நேரத்தில் ஐந்து ஆண்டுகள் கடந்து விடும்.

இதையும் படிங்க: நுபுர் சர்மா வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது; லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

ஆனால் எங்கள் அரசு பஞ்சாப் வரலாற்றில் புதியதொரு முன் மாதிரியை அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் டெல்லி யூனியன் பிரதேசத்தை தொடர்ந்து மாநில அளவில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி இலவச மின்சாரத்தை வழங்குகிறது என அக்கட்யின் ராஜ்யசபா எம்.பி ராகவ் சதாவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மாநில மக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் பட்ஜெட்டில் ரூ.1,800 கோடி வரை கூடுதல் சுமை உருவாகும் என மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்துள்ளார். ஆனால் பஞ்சாப் முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களை வாயடைக்கச் செய்துள்ளது. 

click me!