எம்பிக்களின் ரயில் பயண செலவு இத்தனை கோடியா? மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்!!

By Narendran SFirst Published Jul 1, 2022, 10:34 PM IST
Highlights

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு 62 கோடி ரூபாய் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு 62 கோடி ரூபாய் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் ரயில்களில் முதல் வகுப்பு ஏசியில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல முன்னாள் எம்பிக்கள் 2 ஆம் வகுப்பு ஏசி வசதியுடன் தனது துணையுடனோ அல்லது முதல் வகுப்பு ஏசியில் தனிமையிலோ இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹைதராபாத் செல்லும் பிரதமர் மோடி… நகரை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தது காவல்துறை!!

மேலும் அவர்களின் பயண கட்டணத்தை மத்திய அரசு செலுத்தி வருகிறது. ரயில்வேயின் கட்டணம் மற்றும் கணக்குகள் துறை இதற்கான ரசீதை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கும். இந்த நடைமுறையே வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னாள் மற்றும் தற்போதைய எம்பிக்கள் பயணம் செய்த வகையில் மத்திய அரசு செலவு செய்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்துக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் கடிதம் அனுப்பினார்.

இதையும் படிங்க: உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்… ரஷ்ய அதிபருடன் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

அதற்கு பதிலளித்துள்ள மக்களவை செயலகம், கடந்த 5 ஆண்டுகளில் மேற்படி எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்பிக்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி எனவும், தற்போதைய எம்பிக்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020-21 ஆம் ஆண்டில் இந்த செலவு முறையே ரூ.1.18 கோடி மற்றும் ரூ.1.29 கோடி எனவும் மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

click me!