Thirupati temple : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போறீங்களா.. உங்களுக்கான முக்கிய அறிவிப்பு !!

Published : Feb 23, 2022, 09:31 AM ISTUpdated : Feb 23, 2022, 10:48 AM IST
Thirupati temple : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போறீங்களா.. உங்களுக்கான முக்கிய அறிவிப்பு !!

சுருக்கம்

சுமார் ஓராண்டிற்குப் பின் திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் கடந்த சில நாட்களாக செயல்பட துவங்கியுள்ளன. 

அவற்றின் மூலம் பக்தர்களுக்கு நாளொன்றிற்கு 15 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தமாதம்  தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.

ரூ.300 கட்டண தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இதுவரை ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. நாளை  முதல் 28-ந் தேதி வரை ஒரு நாளைக்கு கூடுதலாக 13,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.

இதேபோல், திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில், தினமும் 15 ஆயிரம் இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கூடுதலாக 5,000 டோக்கன் வினியோகிக்கப்படும்’ என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!