மத்திய அரசை தொடர்ந்து ரிசர்வ் வங்கி அதிரடி... இதையெல்லாம் பார்க்கும் போது ஊரடங்கு மேலும் நீடிக்க வாய்ப்பு..?

By vinoth kumarFirst Published Mar 27, 2020, 11:33 AM IST
Highlights

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வீடு, தொழில்துறையினருக்கான கடனுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வீடு, தொழில்துறையினருக்கான கடனுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.  நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிப்புகளை அறிவித்த நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு அதிரடி அறிப்புகளை வெளியிட்டுள்ளார். 

முக்கிய விவரங்கள்;-

* அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும். 

* பொருளாதார ஸ்திரத்தன்மையை காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

* சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

*  கொரோனா வைரசால் ஏற்படும் பின்னடைவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

* ரெப்போ வட்டி விகிதம் 5.15%-இல் இருந்து 4.20% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

*  சிறு, குறு பொருளாதார வட்டங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணத்திற்கு முழு பொறுப்பு வழங்கப்படும்.

* எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கும் 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு.

* விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும்.

* ரிசர்வ் வங்கி ஊழியர் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* தொழில்துறையினரின் கடனுக்கான வட்டியும் குறையக்கூடும்.

*  தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது மத்திய அரசு அறிவிக்கும் அறிவிப்புகள் பார்க்கும் போது  இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் நீடிக்க வாய்ப்பு உள்ளாதாக கூறப்படுகிறது.

click me!