தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்கள்: கர்நாடக போலீஸார் அதிரடி

By Asianet TamilFirst Published Feb 18, 2020, 3:39 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 மாணவர்களை கர்நாடகாவின் ஹூப்பள்ளி போலீஸார் தேச துரோக வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 மாணவர்களை கர்நாடகாவின் ஹூப்பள்ளி போலீஸார் தேச துரோக வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த கைது சம்பவம் குறித்து பேசிய ஹூப்பள்ளி போலீஸ் ஆணையர் திலீப், ஹூப்பள்ளி நகரில் தனியார் பொறியியல் கல்லூரி படித்த காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அமீர், பாசித், தலிப் 3 மாணவர்கள் புல்வாமா தாக்குதல் நடந்த முதலாம் ஆண்டு நினைவு நாளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகியதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் பசவராஜ் அனாமி போலீஸார் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸார் கல்லூரி விடுதிக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.மாணவர்கள் மீது ஐபிசி 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப்பின் சிஆர்பிசி 169 பிரிவின் கீழ் பத்திரத்தில் 3 மாணவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மாணவர்கள் விடுக்கப்பட்டதற்கு இந்து அமைப்புகள் சிலவும், மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து மீண்டும் மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்
 

click me!