எப்படி யோசிக்கிறாங்க… கடவுள் சிவனுக்காக ஒரு சீட் 'ரிசர்வ்'

By Asianet TamilFirst Published Feb 18, 2020, 1:39 PM IST
Highlights

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர்.
 

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளனர்.

பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதில் வாரணாசியில் இருந்து மத்தியப்பிரதேசம் இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த ரயில்  இந்தூர் அருகே இருக்கும் ஓம்கரேஸ்வர், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆகிய 3 ஜோதிர் லிங்க தரிசனங்களை இணைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் பி-5 எனும் பெட்டியில் படுக்கை 64-ம் எண்ணைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளனர். அந்த இருக்கையில் யாரும் அமராமல் அந்த இருக்கையைச் சிறிய கோயிலாகவும் உருவாக்கியுள்ளனர்.

இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார்  கூறுகையில், "வாரணாசியில் இருந்து இந்தூர் வரை செல்லும் மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பி-5 பெட்டியில் 64-ம் எண் படுக்கையைக் கடவுள் சிவனுக்காக முன்பதிவு செய்துள்ளோம். அந்த இருக்கையில் யாரும் அமரமாட்டார்கள். முதல் முறையாக ரயிலில் சிறிய கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை கடவுள் சிவனுக்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பயணிகள் உணர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

click me!