13 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த 23 வயது பெண்!

 
Published : May 12, 2018, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
13 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்த 23 வயது பெண்!

சுருக்கம்

23 year old girl married to a 13 year old boy

13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த ஐய்யாம்மா என்ற சிறுவனின் அக்காள் மகளான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு இந்த  திருமணம் நடைபெற்றுள்ளது.சிறுவனும் குறித்த பெண்ணும் அடிக்கடி வீட்டிற்கு சென்று வரும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதன் காரணமாகவே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

சிறுவனும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு திருமணம் நடைபெற்றிருந்தாலும், 13 வயது சிறுவன் மைனர் என்பதை அறிந்தும் 23 வயது இளம்பெண்னுடன் அவரது பெற்றோர்கள் எப்படி திருமணம் செய்து வைத்தார்கள் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும், இப்படி ஒரு திருமணத்தை செய்து வைத்த பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.மேலும் இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன் 18 வயது இளம்பெண் 17 வயது சிறுவன் தன்னை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!