கர்நாடாக சட்டபேரவை தேர்தலுக்கான  வாக்குபதிவு தொடங்கியது

 
Published : May 12, 2018, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
கர்நாடாக சட்டபேரவை தேர்தலுக்கான  வாக்குபதிவு தொடங்கியது

சுருக்கம்

karnataka election started

கர்நாடக சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஷிமோகா அருகே ஷிகார்பூரில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிஎஸ் எடியூரப்பா வாக்களித்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்தார்.

ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 

தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் கர்நாடக போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படையினர் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வாக்கு பதிவு வரும் 15ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!