இளம் பெண்ணை 4 நாட்களாக கட்டிவைத்து 40 பேர் கற்பழித்த கொடூரம் ... ஹரியானாவில் அரங்கேறிய அவலம்!

Asianet News Tamil  
Published : Jul 20, 2018, 06:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
இளம் பெண்ணை 4 நாட்களாக கட்டிவைத்து 40 பேர் கற்பழித்த கொடூரம் ... ஹரியானாவில் அரங்கேறிய அவலம்!

சுருக்கம்

22-Year-Old Raped By 40 Men For Four Days In Panchkula

வேலை தேடி சென்ற 22 வயது பெண்ணை விடுதியில் அடைத்துவைத்து 4 நாட்களாக 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளர்.

ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவில் 22 வயது பெண் ஒருவர் வேலை தேடி சென்றுள்ளார்.  அங்கு அவரை சிலர்  விடுதியில் அடைத்து வைத்தனர். சுமார் நான்கு நாட்களாக  ஜூலை 15 ஆம் தேதியிலிருந்து ஜூலை 18 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஹரியானாவின் மோர்னி ஹில்ஸ் பகுதியில் நடந்த சம்பவம் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும், பலாத்காரம் செய்த குற்றவாளிகளில் ஒருவனை அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்த நபர் என்றும் அந்த நபர்தான் தனக்கு அந்த விடுதியில் வேலை வாங்கி தருவதாகவும் உறுதியளித்தார்.  இந்த தகவலை அந்தப்பெண்  போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், வேலை தேடி சென்றபோதுதான் தன்னை விடுதியில் அடைத்துவைத்து 4 நாட்கள் 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று போலீஸில் தெரிவித்துள்ளார்.

பலாத்காரம் செய்யப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் குறித்து விடுதிப் பணியாளர்கள் இரண்டு பேர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

சிம் கார்டு போல இனி பேங்க் அக்கவுண்ட்டும் மாறலாம்! - RBI-யின் அதிரடி 'போர்ட்டபிலிட்டி' திட்டம்
வாகன ஓட்டிகளுக்கு பேரிடி.. டீசல் ரூ.25, பெட்ரோல் ரூ.7.41 உயர்வு..! நாடு முழுவதும் புதிய விலை அமல்