கேரளாவை புரட்டி போட்ட கனமழை...! இதுவரை 22 பேர் உயிரிழப்பு..!

First Published Aug 9, 2018, 3:44 PM IST
Highlights

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவால் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவை புரட்டி போட்ட கனமழை...!  20 பேர் உயிரிழப்பு

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவால் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி  உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை !!

தொடர் பெய்து வரும்  கனமழையால், இடுக்கி அணையில் நீர் மட்டம் அதன் முழுக் கொள்ளவை எட்டியுள்ளதையடுத்து 26 ஆண்டுகளுக்குப் பின் இன்று அணை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெரியாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.வளைவு வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணை ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது.

இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின்னர் இடுக்கி அணை திறந்து விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் வேறு ஒரு இடத்திற்கு  இடம் பெயர்ந்து வருகின்றனர். 

இதனை  தொடந்து, இடுக்கி , வயநாடு, நீலாம்பூர், அடையன்பாரா பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கி 22 பேர் பலியாயினர்.இந்நிலையில் நிலைமையை சமாளிக்க மத்திய அரசின் உதவியை  நாடி உள்ளது கேரளா அரசு.

தேவிகுளம், உடும்பன்சோலை தாலுகா , கன்னூர், எர்னாடு பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள இடங்களில், மீட்பு குழுவினர் படை எடுக்க தொடங்கி உள்ளனர். 

வெள்ள அபாய எச்சரிக்கை:  24  மணி நேரத்தில் மீண்டும் மழை

இந்நிலையில் அடுத்து வரும் 24  மணி நேரத்திற்கு  மீண்டும் மழை வர வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப் பட்டு உள்ளதால், கேரளா  மக்கள்  பெரும்  துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க இடுக்கி அணையில் நீர் மட்டம் அதன் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதையடுத்து 26 ஆண்டுகளுக்குப் பின் இன்று அணை திறக்கப்பட்டு உள்ளத்தால், பெரியாற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் இதனை மேலும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!