ஒடிசாவில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது. பாஜக 72 இடங்களிலும், முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 57 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 147 தொகுதிகளைக் கொண்ட ஒடிசா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சிகள் மோதுகின்றன.
குறைந்தது 110 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என ஆளும் பிஜு ஜனதா தளம் ஞாயிற்றுக்கிழமை கூறியது. ஆனால், அதற்கு மாறாக, பிற்பகல் 1 மணி நிலவரப்படி, பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது.
undefined
பாஜக 72 இடங்களிலும், முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 57 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் சிபிஐ(எம்) 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறன. சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்ககளில் முன்னிலையில் உள்ளனர்.
24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், 6வது முறையாக ஆட்சியைப் பிடிப்பார். சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெறலாம். ஆனால், அது சாத்தியம் இல்லை என்பதையே தற்போதைய போக்கு காட்டுகிறது.
ஆக்சிஸ் இந்தியாவின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, ஒடிசாவில் 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 62, பாஜக 80 இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டது. காங்கிரஸ் 5 முதல் 8 இடங்களை கைப்பற்றும் எனக் கூறப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜக 18-20 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பிஜு ஜனதா தளம் 0-2, காங்கிரஸ் 0-1 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் கூறியிருந்தது.
Ramanathapuram: ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.களுக்கும் பின்னடைவு! முன்னிலையில் நவாஸ் கனி!