அடுத்த மாதம் வருகிறது 200 ரூபாய் நோட்டு - முடிந்தது அச்சடிக்கும் பணி!!

 
Published : Jul 26, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
அடுத்த மாதம் வருகிறது 200 ரூபாய் நோட்டு - முடிந்தது அச்சடிக்கும் பணி!!

சுருக்கம்

200 rupees notes arriving august

சில்லறை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அடுத்த மாதம் 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500  மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  மத்திய அரசு திடீரென அறிவித்தது.

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 95 சதவீத ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற்றது.

கருப்புப்பணத்தை ஒழிக்க மத்திய அரசு இந்த திடீர் நடவடிக்கையை மேற்கொண்டது. மக்கள் சிரமம் நீடிக்கக்கூடாது என்பதற்காக மத்திய அரசு புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டை அறிமுகம் செய்தது.

பழைய 500 ரூபாய்க்கு பதில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ. 500 நோட்டும் அச்சிடப்பட்டது. 

ஆனால் ரூ 500, ரூ. 2ஆயிரம் நோட்டுகளை  மாற்றுவது தொடர்ந்து சிரமமாக உள்ளது. அந்த குறையையும் நிவர்த்தி செய்ய ரிசர்வ் வங்கி ஆலோசித்தது. இதைத்தொடர்ந்து புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி  புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி கள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அந்தப் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும்.500 ரூபாய்  நோட்டுக்களை அதிக அளவில் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது என்றும் 200 ரூபாய் நோட்டு வெளியீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!