இந்த ஆண்டின் 3 வது கிரகணம் அக்டோபரில் நிகழ உள்ளது. இது இந்த ஆண்டின் 2-வது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி நிகழும். இதனை இந்தியாவில் பார்க்க முடியாது.
இந்த ஆண்டு 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகண நிகழ்வுகளும் ஏற்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் ஒரு சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது. இப்போது மீதமுள்ள இரண்டு கிரகணங்கள் அக்டோபர் மாதத்தில் நிகழும். இந்த ஆண்டு 4 கிரகணங்களில் முதல் கிரகணம் ஏப்ரல் 20ம் தேதியும், அதை தொடர்ந்து மே 5ம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் ஏற்பட்டது. மீதமுள்ள இரண்டு கிரகணங்கள் அக்டோபர் மாதத்தில் நிகழும்.
அதன்படி இந்த ஆண்டின் 3 வது கிரகணம் அக்டோபரில் நிகழ உள்ளது. இது இந்த ஆண்டின் 2-வது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி நிகழும். இதனை இந்தியாவில் பார்க்க முடியாது. டெக்சாஸ், மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில், அலாஸ்கா மற்றும் அர்ஜென்டினாவின் சில பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும்.
இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி கிரகணம் அக்டோபர் 28-ம் தேதி நிகழவுள்ளது.இது சந்திர கிரகணமாக இருக்கும். இந்த கிரகணம் இந்தியாவின் சில பகுதிகளில் தெரியும். இது ஒரு பகுதி சந்திர கிரகணம் மற்றும் இந்தியாவைத் தவிர ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட-தென்னாப்பிரிக்கா, ஆர்க்டிக், அண்டார்டிகா, பசிபிக், அட்லாண்டிக் மற்றும் ஆசியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலும் தெரியும்.
உலகின் வலிமையான பாஸ்போர்ட் எது?.. இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் அக்டோபர் 28-29 இரவு நிகழும். இந்த கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இருந்து பார்க்கலாம். இது ஒரு பகுதி சந்திர கிரகணம் ஆகும், இதில் நிலவின் ஒரு பகுதியில் மட்டுமே கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும் போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும் போது இது நிகழ்கிறது. இந்த கிரகணம் அக்டோபர் 29, வெள்ளிக்கிழமை அதிகாலை 1:06 மணிக்குத் தெரியும் மற்றும் மதியம் 2:22 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணத்தின் போது சந்திரனின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்தியாவில் இருந்து தெரியும், அதிகபட்ச கிரகணம் அக்டோபர் 29 அன்று காலை 01:44:05 மணிக்கு புது தில்லியில் தெரியும்.