மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 08:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுருக்கம்

2 percentage DA hike for Central Government employees - approved

மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள், 58 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இந்த அகவிலைப்படி 2017, ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏறக்குறைய ஒரு கோடிக்கும் மேலான பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு என்பது நாட்டில் ஏற்படும் விலை உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதற்கு முன் கடந்த ஆண்டு 6 சதவீதம் உயர்த்தப்பட்டு 125 சதவீதமாக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. 7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டதையடுத்து, அடிப்படை ஊதியத்தோடு, அகவிலைப்படி இணைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜூலை முதல்தேதியை முன்தேதியிட்டு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தியது. இப்போது மேலும் 2 சதவீதம் உயர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நீட் புயலால் தர்மேந்திர பிரதான் அவுட்! கல்வித் துறையை கைப்பற்றிய பிரகலாத் ஜோஷி.. யார் இவர்?
டைகர் ஹில் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை.. தோள் கொடுத்த இஸ்ரேல்.. கார்கில் தந்த வரலாற்று பாடம்!