11 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

By Raghupati RFirst Published Aug 22, 2022, 9:17 PM IST
Highlights

வரும் துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில், இத்தனை மதம், மொழி, கலாசாரம், பண்பாட்டு வழிமுறைகளைக் கடைபிடித்து வாழும் நாட்டினை காண முடியாது. இந்த கலாசார பன்முகத்தன்மைதான் இந்தியாவிற்கான பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் இந்தியா என்றவுடன் அனைவருக்கும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது நினைவுக்கு வருகிறது.

மொழி, உணவு, உடை, நிறம், மதம், என்பது உள்ளிட்ட மாறுபட்ட பழக்கவழக்கங்களுடன் இந்தியாவில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையால்தான் உலகம் இந்தியாவை தனித்துவமிக்க நாடாக பார்க்கிறது. இந்தியாவின் மிகவும் முக்கிய இந்துப் பண்டிகைகளில் ஒன்று துர்கா பூஜை. இந்து பஞ்சாங்கப்படி புரட்டாசி மாதத்தில் வரும் இது 10 நாட்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் மகிஷாசுரனை வாதம் செய்த சக்தியின் வடிவமான தேவி துர்கையை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?

பத்து நாட்களில் கடைசி ஆறு நாட்கள் மஹாளயம், ஷஷ்டி, மஹா சப்தமி, மஹா அஷ்டமி, மஹா நவமி மற்றும் விஜய தசமி என சிறப்பாகக் துர்கா பூஜை அல்லது துர்கோத்சவம் எனக் கொண்டாடப் படுகிறது. இது இந்திய கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு ஒரு அங்கமாக இருந்து வருகிறது என்பதோடு (குறிப்பாக வங்காளத்தில்) முதல் ஒன்பது நாட்களில் தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப் படுகின்றன. 

பத்தாவது நாள் விஜய தசாமியாக தீமைகளை நன்மை அழிப்பதாக கொண்டாடப் படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி துர்கா பூஜை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என கூறியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்

துர்கா பூஜையை முன்னிட்டு கடந்த ஆண்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக இந்த தொகையை மம்தா பானர்ஜி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச உரிமங்கள் மற்றும் 50 சதவீத மின் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்டவையும் கடந்த ஆண்டு சலுகைகளாக அறிவிக்கப்பட்டன.

தற்போது  3 ஆவது ஆண்டாக துர்கா பூஜைக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவியை பெறுவார்கள் என மேற்கு வங்க முதலமைச்சர் பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..இரண்டு பேருடன் கள்ளக்காதல்.. கணவனை கழட்டிவிட்ட மனைவி - விஷயம் தெரிந்த மாமனார் செய்த சம்பவம் !

click me!