
உத்தரப்பிரதேசத்தில் 100 வயது மூதாட்டியை, குடிபோதையில் ஒரு இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதில் அந்த மூதாட்டி உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசம், மீரட் மாவட்டம், ஜானி கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கித் புனியா. இவர் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அங்கித் புனியா நேற்று நன்றாக மதுகுடித்துவிட்டு, அந்த கிராமத்தில் தனிமையில் வசித்து வந்தநேற்று அந்த கிராமத்தில் வசித்து வந்த 100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்கள் வந்தனர். இதைப் பார்த்த புனியா அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால், அதற்குள் அந்த கிராம மக்கள் புனியா விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். ஆனால், அந்த மூதாட்டி, மரணமடைந்ததையடுத்து, புனியா மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.