Kartavya Path, 75th Republic Day: முதல் முறையாக கர்தவ்ய பாதையில் 100 பெண் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி!

By Rsiva kumar  |  First Published Jan 26, 2024, 8:32 AM IST

நாட்டின் 75ஆவது குடியரசுத் தினத்த முன்னிட்டு கர்தவ்ய பாதை எனப்படும் ராஜ் பாதையில் 100 பெண் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி முதல் முறையாக நடக்க இருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான 75ஆவது குடியரசுத் தின விழா இன்று சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் இராணுவ வலிமை மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை ஈர்க்கக் கூடிய காட்சியுடன் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கர்தவ்யா பாதையில் 90 நிமிட அணிவகுப்புடன் குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறார். இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் சிறப்ப் விருந்தினராக கலந்து கொள்கிறார்.

குடியரசு தின அணிவகுப்பு 2024: மகளிர் சக்தியை காட்சிப்படுத்தும் டிஆர்டிஓ!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் டெல்லி கர்தவ்ய பாதை எனப்படும் ராஜ் பாதையில் 100 பெண் கலைஞர்கள் முதல் முறையாக இசைக்கருவிகளை வாசிக்க இருக்கின்றனர். இதில், நாதஸ்வரன், சங்கு, நகாடா என்று பல இசை வாத்தியங்களை இசைக்க இருக்கின்றனர். பெண்களை மையமாக வைத்து இந்த குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியானது காலை 10.30 மணிக்கு தொடங்கி தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நடைபெறும்.

குடியரசு தினம் எப்படி உருவானது? ஏன் ஜனவரி 26-ம் தேதி தேர்வு செய்யப்பட்டது?

போர் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடங்கும். அங்கு மலர் வளையம் வைத்து போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். இதையடுத்து இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரான்சு குடியரத் தலைவர் இம்மானுவேல் முர்மு கலந்து கொள்கின்றனர். அதன் பிறகு பிரதமர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

click me!