புதுச்சேரியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்க வருகை புரிந்த அமைச்சரிடம் முறையிட்ட மூதாட்டி ஒருவர் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்தால் 100 தோப்புக்கரணம் போடுவதாக கூறினார். இதனை கேட்ட அமைச்சர் வியப்பில் ஆழ்ந்தார்.
புதுச்சேரியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்க வருகை புரிந்த அமைச்சரிடம் முறையிட்ட மூதாட்டி ஒருவர் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்தால் 100 தோப்புக்கரணம் போடுவதாக கூறினார். இதனை கேட்ட அமைச்சர் வியப்பில் ஆழ்ந்தார். புதுச்சேரி அரசு பேட்கோ நிதியின் மூலம் ஊசுடு தொகுதி வள்ளுவன்பேட் கிராமத்தில் ரூ.35 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கியது.
இதையும் படிங்க: ரூ.350 கோடி ஹெராயின் பறிமுதல்: குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிரடி: பாகிஸ்தானிலிருந்து வந்ததா?
இதற்கான பூமி பூஜையை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் தொடக்கி வைத்தார். முன்னதாக பூஜைக்கு வந்த அமைச்சரிடம் கிராமத்து பெண்கள், எங்கள் ஊர் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி கிடைக்கிறது. குறிப்பாக சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கு என நேரில் அழைத்து சென்று காண்பித்தனர்.
இதையும் படிங்க: சூப்பர்மூன் 13-ம்தேதி இரவு வானில் தோன்றும்: பெயர் என்ன? இந்தியாவில் தெரியுமா?
இதனை சரி செய்து தர வேண்டும் என்றும் 100 நாள் வேலை செய்தும் சம்பளம் வழங்கப்படவில்லை என்று அமைச்சரிடம் முறையிட்டனர். அதற்கு அமைச்சர், என்னை நீங்கள் வேலை வாங்கிக் கொள்ளுங்கள், அதற்கு தான் நான் இருக்கிறேன் என்று அவர்களிடம் கூறினார். இதற்கு ஒரு மூதாட்டி எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தந்தால் உங்களுக்கு 100 தோப்புக்கரணம் போடுவதாகக் கூறினார். மூதாட்டியின் பேச்சை கேட்டு அசந்து போன அமைச்சர் அவருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தார்.