இனி நூறு நாள் வேலையில் ஏமாற்ற முடியாது… உட்கார்ந்து கதை பேச ஆப்பு !!

By Selvanayagam PFirst Published May 5, 2019, 8:07 AM IST
Highlights

நாடு முழுவதும்  நடைபெற்று வரும் நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலையாட்கள் ஏமாற்றாமல் இருக்க குளம், குட்டைகளில், சதுர குழிகள் தோண்ட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பணியாட்கள் வேலை செய்யாமல் அரட்டை அடிப்பதற்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு, ஆண்டுக்கு, 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. குளம், குட்டை துார்வாருதல், மண் பாதைகளை சீரமைத்தல், மரம் நடுதல் போன்ற பணிகள் நடந்து வந்தன.

இதில், குளம், குட்டை துார்வாரும் பணி, கண் துடைப்புக்கு நடப்பதாகவும், பணியாளர்கள், குளம், குட்டையில் முளைத்துள்ள செடி, கொடிகளை மட்டும் அகற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், துார்வாரும் பணி, தற்காலிகமாக கைவிடப்பட்டது. 

இந்நிலையில், குளம் குட்டைகள் துார்வாருவதில், முறைகேடு ஏற்படாமல் தடுக்கும் வகையில், புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.அதாவது 'சங்கன் பிட் - சங்கன் பாண்ட்' என்ற விதிமுறைப்படி, குளம், குட்டைகளுக்குள், சதுரவடிவில் குழி வெட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரவலாக துார்வாராமல், குளத்துக்குள் குழி எடுக்கும் பணி வழங்கப்படும்.குழுவில் உள்ள தொழிலாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப, குளத்துக்குள் சதுர வடிவில் குழிகள் வெட்டப்படும். துார்வாரப்படும் மண், கரையோரமாக கொட்டி, கரைகள் வலுப்படுத்தப்படும். இதன்மூலம், தொழிலாளர்களின் பணியளவு எளிதாக கணக்கிடப்பட்டு, சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!