இளைஞர் வயிற்றில் இருந்த கத்தி, டூத் ப்ரெஷ், உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட பொருட்கள்! அதிர்ச்சி சம்பவம்!

Published : May 26, 2019, 01:32 PM IST
இளைஞர் வயிற்றில் இருந்த கத்தி, டூத் ப்ரெஷ், உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட பொருட்கள்! அதிர்ச்சி சம்பவம்!

சுருக்கம்

மன நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்து 8 ஸ்பூன், கத்தி, டூத் ப்ரெஷ் உள்ளிட்ட 10 த்திற்கும் மேற்பட்ட பொருட்கள், அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.   

மன நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்து 8 ஸ்பூன், கத்தி, டூத் ப்ரெஷ் உள்ளிட்ட 10 த்திற்கும் மேற்பட்ட பொருட்கள், அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 

இமாச்சல பிரதேசம் மான்டி பகுதியில்,  மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கரண்சென் என்பவரை, அவருடைய குடும்பத்தினர் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  இது குறித்து நோயாளியிடம் மருத்துவர்கள் கேட்டதற்கு, அவர் எதையும் பேசவில்லை.  பின் குடும்பத்தினர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் வயிற்று வலியால் அவதிப்பட்ட கரணை ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் வயிற்றில், ஒரு கத்தி, இரண்டு ஸ்க்ரூட்ரைவர்,  எட்டு ஸ்பூன், 2 டூத் ப்ரெஷ் உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தது.   இதனால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர்.

அதன்படி மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது இவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்துமின்றி பொருட்கள் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் பொதுவாக மனிதர்கள் இதுபோன்ற பொருட்களை விழுங்க மாட்டார்கள் ஆனால் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் இப்படி செய்துள்ளதாக தெரிவித்தனர்.  மேலும் தற்போது அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தொடர்ந்து ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இடைவெளி விடுங்கள்.. EMI கட்ட வேண்டியுள்ளது.. வைரலாகும் காரின் பின்புறம் ஓட்டப்பட்ட ஸ்டிக்கர்..
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!