10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கம்ப்யூட்டரிலும் எழுதலாம்! புதிய வசதி...

 
Published : Mar 01, 2018, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கம்ப்யூட்டரிலும் எழுதலாம்! புதிய வசதி...

சுருக்கம்

10 and 12th class exams can be written on the computer!

சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளை கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் எழுத புதிய வசதியை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால், இந் புதிய வசதியை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டு முதல், ஒரு சில நிபந்தனைகளுடன் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது. கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் தேர்வு எழுதுபவர்கள், மருத்துவ சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று. அது மட்டுமல்லாது, கம்ப்யூட்டரில் தேர்வெழுத முன்கூட்டியே தேர்வு அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.

மாணவர்களே கம்ப்யூட்டர் அல்லது லேப்டாக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கம்ப்யூட்டரில் இண்டர்நெட் இணைப்புக்கு அனுமதி இல்லை. மாணவர்கள் கொண்டு வரும் கம்ப்யூட்டரை முதலில் தேர்வு அதிகாரி சோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அது மட்டுமல்லாது, இந்த வசதியைப் பெற அந்த மாணவரின் வருகைப் பதிவு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்க வேண்டுமாம். இந்த வசதி குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும என்றும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்
வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு