குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்! பெண் எழுத்தாளரின் துணிச்சல் முடிவு! வைரலாகும் புகைப்படம்!

First Published Mar 1, 2018, 12:15 PM IST
Highlights
A female writer who is breastfeeding child! Malayalam magazine released as cover


கவிஞர், எழுத்தாளர், விமானப் பணிப்பெண் என பன்முக திறமைக் கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த ஜிலு ஜோசப். இவர் மலையாள பத்திரிக்கை ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளதன் மூலம் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார். 

மலையாளத்தில் மாதம் இரு முறை வெளியாகும் கிரிகலட்சுமி என்ற இதழின் அட்டைப்படத்தில், தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் வகையில் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொது வெளியிடங்களில், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக இவ்வாறு போஸ் கொடுத்துள்ளாராம். 

மலையாள இதழியல் வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற துணிச்சலான போட்டோ ஒன்றை அட்டைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்கிறார்கள். ஜிலு ஜோசப்பின் அட்டைப் படத்தை பார்த்து ஏன்? என்று கேள்வி எழுப்பியவர்கள் கூட, அதன் நோக்கத்தை புரிந்து கொண்டு அவரை பாராட்டி வருகின்றனர். கேரளா மட்டுமல்லாது நாடு முழுவதும் ஜிலு ஜோசப்புக்கும் பாரட்டுகள் குவிந்து வருகிறது.  ஜிலு ஜோசப்பின் இந்த புகைப்படத்துக்கு  சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது போல் கொடுக்கப்பட்ட போஸ் குறித்து ஜிலு ஜோசப், தாய்ப்பால் புகட்டுவது என்பது இயல்பான நிகழ்வு. இது பெண்களுக்கு கிடைத்துள்ள வரம். இதை தப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் மீதுதான் தப்பு உள்ளதே தவிர, தாய்ப்பால் கொடுக்கும்போது மறைத்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதன் நல்ல நோக்கத்தை உணர்ந்துதான், நான் மறு பேச்சு பேசாமல் இதற்கு
சம்மதித்தேன் என்று கூறினார். 

கன்னியாஸ்திரியாக உள்ள தனது மூத்த சகோதரியும் தனது தாயும் இதுபோல் போஸ் கொடுக்க வேண்டாம் என்று கூறினர். அவர்கள் கருத்தை நான் மதித்தபோதிலும், எனக்கு சரி என்று பட்டதை நான் செய்துவிடுவேன். அந்த வகையில்தான் இந்த போட்டோக்களுக்கு சம்மதம் தெரிவித்தேன் என்கிறார் ஜிலு ஜோசப்.

கிரிகலட்சுமி பத்திரிகை, இதற்காக ஜிலு ஜோசப்பை அணுகியபோது, அவர் மறுப்பேதும் கூறாமல் இதற்கு சம்மதித்துள்ளாராம் ஜிலு ஜோசப்.

click me!