பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய ’தாதா’ மிராஜ்... ஒன்றரை நிமிடத்தில் செலவு இத்தனை கோடிகளா..?

By Thiraviaraj RMFirst Published Feb 27, 2019, 11:33 AM IST
Highlights

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை 90 விநாடிகளில் முடித்து திரும்பிய விமானப்படையினரை பாராட்டி வரும் வேளையில் இந்தத் தாக்குதலுக்கு ரூ2.20 கோடியே செலவானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை 90 விநாடிகளில் முடித்து திரும்பிய விமானப்படையினரை பாராட்டி வரும் வேளையில் இந்தத் தாக்குதலுக்கு ரூ2.20 கோடியே செலவானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் கொந்தளித்து தவித்த இந்தியா பாகிஸ்தானுக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கும் நெத்தியடியாக பழிக்கு பழி தீர்த்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை அருகே பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ எடையிலான குண்டுகளை வீசி தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்துள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் சீறிப்பாய்ந்து சென்ற மிராஜ் ரக விமானம் ஒவ்வொன்றிலும், லேசர் மூலம் குறிவைத்து தாக்கும் வகையில் 225 கிலோ எடை கொண்ட குண்டுகள் நிரப்பப்பட்டிருந்தன. ஆனால் 3 பயங்கரவாத முகாம்களில் 4 அல்லது 5 குண்டுகள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. 

அந்தக் குண்டுகளின் மொத்த மதிப்பு 1 கோடியே 70 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற செலவுகளையும் சேர்த்து பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் பாடம் புகட்ட இந்திய ராணுவத்திற்கு சுமார் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மட்டுமே செலவானதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு குறைவான செலவில் சாமர்த்தியமாக தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு நாலாபுறமும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

click me!